ஆலய உப தெய்வங்கள்

இது எல்லாமே ஆன்மீகத்தின் வெளிப்பாடு தான்.

விநாயகர் மற்றும்
பால முருகர்

தன்வந்திரி பகவான்

பால ஆஞ்சநேயர்

கால பைரவர்

யோகஆன்மா சிவன்

சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினாரகளென்றும், சிவபெருமான் மற்ற கடவுள்களைப் போல் ஆரம்பர அலங்காரம் ஏதும் இல்லாமல், எப்போதுமே எளிமையான தோற்றத்தில் காணப்படுவார்

தன்வந்திரி பகவான்

தன்வந்திரி இந்து மதத்தில் நல்ல உடல்நலத்திற்காக வழிபடப்படும் கடவுள் வடிவங்களுள் ஒன்றாகும். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் இந்த வடிவம், தசாவதாரத்திற்குள் சேர்வதில்லை. பெரும் புகழ்வாய்ந்த
விஷ்ணு கோவில்களில் மட்டும் தன்வந்திரி
(தனிக்கோயிலில்) காணப்படுகிறார்.
இந்து மத வேதங்கள் மற்றும் புராணங்கள் தன்வந்திரியை தேவர்களின் மருத்துவர் என்றும் ஆயுர் வேத மருத்துவத்தின் கடவுள் என்றும் குறிப்பிடுகிறது.

பால ஆஞ்சநேயர்

அனுமன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் இறைவன் இராமனின் பக்தனும், இந்துகளின் கடவுளும் ஆவார் இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். ஆஞ்சநேயரின் வடிவங்களில், ஒன்பது வடிவங்கள் மிகவும் போற்றுதலுக்குரியதாக கூறப்படுகிறது.அஞ்சனை மகனாக, அழகான பாலகனாக, அவர் தாயோடு சேர்ந்து இருக்கும் கோலமே 'பால ஆஞ்சநேயர்" என்று சொல்லப்படுகிறது. இவரை துதித்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தை அம்மாவாசை பூஜை

Awesome Image
Awesome Image
Awesome Image Awesome Image Awesome Image Awesome Image Awesome Image Awesome Image
Awesome Image Awesome Image Awesome Image Awesome Image Awesome Image Awesome Image

ஆலய தெய்வங்களின் துதி

 • அகாரம் உகாரம் மகாரம் சிகாரம் ஆகி
  நின்ற ஓம் கார பரம் பொருளே
  விக்னேஷ்வரா உமை துதிக்கிறோம்.

  விக்னேஷ்வரர் துதி

  வாலை அரசி ஆலயம்
 • குருவாய் வந்து எமை ஆட்கொண்ட
  சுப்பிரமணியனே எம் குருநாதா வாலை
  அரசி புகழ் பாட எமக்கு அருள் புரிவாய்.

  குரு துதி

  வாலை அரசி ஆலயம்
 • ஆதி வைத்தியனே முப்பினியை தீர்க்க கூடிய
  அமிர்த கலசத்தை கரங்களில் தங்கியவனே வாசுதேவனாகிய தன்வந்திரியே வாலை அரசி
  புகழ் பாட வரம் தருவாய்.

  தன்வந்திரி துதி

  வாலை அரசி ஆலயம்
 • படைப்பு தெய்வத்தின் பத்தினியே
  கலைகளுக்கு அதிபதியாகிய காலை
  மகளே காலத்திலும் அழியாத வாலை அரசி
  புகழ் பாட அருள் புரிவாய்.

  கலை மகள் துதி

  வாலை அரசி ஆலயம்
 • சரணாகதியின் வடிவமே கனர கடந்த பக்தியின்
  சொரூபமே அழைத்த உடன்
  வந்து ஆற்றலை தரும் பால ஆஞ்சநேயனே
  வாலை அரசி புகழ் பாட அருள் புரிவாய்.

  ஆஞ்சநேயர் துதி

  வாலை அரசி ஆலயம்
 • காலத்தை கடந்தவனே கால சம்கார
  மூர்த்தியே பூத பிசாச துஷ்டர்களை
  அடக்கி ஆளும் ஷேத்திர பாலனே கால
  பைரவமே வாலை அரசி புகழ் பாட அருள்
  புரிவாய்.

  கால பைரவர் துதி

  வாலை அரசி ஆலயம்

ஆலய தெய்வங்களின்புகைப்படங்கள்

மாதம் இரண்டு முறை அன்னதானம் வழங்கப்படும்

ஒவ்வொரு மாதமும் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி அன்று மதியம் 1 மணிக்கு பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்படும்

அனைத்து அமாவாசை மற்றும் பவுர்ணமி நண்பகல் பூஜை மற்றும் தேய்பிறை அஷ்டமி கால பைரவர் பூஜை நடைபெறும்.

valaiarasitemple@gmail.com
+91 88387 26915